Turmeric Root 250g – கிழங்கு மஞ்சள்

62.00

Out of stock

SKU: Gro1205 Category:

Description

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன.

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் – அரை ஸ்பூன், பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 3 டீஸ்பூன். கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.