Description
இஞ்சி பொடியை தேனில் கலந்து ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர், தினமும் இரண்டு டீஸ்பூன் வீதம், உணவிற்கு முன்னர் சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றைப் பொருமல் தீரும்.
இஞ்சிப்பொடியை சிறிது தண்ணீர் கலந்து தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி பொடியுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி அளவு பொடியுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
Reviews
There are no reviews yet.