Rice Bamboo (Raw) 250gm / மூங்கில் அரிசி

160.00

Out of stock

SKU: Ric4264 Category:

Description

பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதைகளாகும்.

ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

கஞ்சி செய்யும் முறை

மூங்கில் அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – ¼ கப்
பிரியாணி இலை – 4
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
புதினா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சிறிய வெங்காயம் – 10
உப்பு – தேவைக்கு
முந்திரிப் பருப்பு – சிறிது
ஏலக்காய் – 2
தேங்காய் பால் – 1 கப்

மூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.