Description
இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட நிலக்கடலை மூலம் தயாரிக்கப்பட்ட சாத பொடி.
தில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலைஉண்பது நல்லது.
நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம். தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய நரம்புகளை பாதுகாக்கிறது. இதயநோயை தடுக்கிறது. மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.
நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும். பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
Reviews
There are no reviews yet.