Description
எள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தடுக்கும். குறிப்பாக கருப்பு நிற எள்ளு விதைகளில் தான் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.
எள்ளு விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஒருவர் எள்ளு விதைகளை அன்றாடம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலில் உள்ள கழிவுப் பொருட்களும் சரியாக வெளியேற்றப்படும்.
மது அருந்தும் பழக்கம் இருப்போருக்கு கல்லீரல் வேகமாக பாதிப்படையும். இத்தகையவர்கள் தினமும் எள்ளு விதைகயை சாப்பிட்டு வந்தால், ஆல்கஹாலால் கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.
Reviews
There are no reviews yet.