Description
சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது. முதுகு வலியும், மூட்டு வலியும் உள்ளவர்கள் வறுத்து பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளை பொடியாக்கி வெண்ணீர் விட்டு கலந்து மூட்டு வலி உள்ள இடங்களில் தடவலாம். கோதுமை ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.
அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும். கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண்மை அதிகரிக்கும். அக்கிப் புண், தீப்புண் இடங்களில் மாவை நேரடியாகவோ, வெண்ணை சேர்த்தோ பூசலாம். இன்னும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்த கோதுமையை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
Reviews
There are no reviews yet.