Description
சுவை நிறைந்த இதனை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். . இதில் அதிகப்படியான பொட்டாசியம்,மக்னீசியம்,இரும்புச்சத்து மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை நிரம்பியிருக்கிறது. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் இந்த பீன்சை எடுத்துக் கொள்ளலாம். அதனால் உங்களுக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைத்திடும். இதனை ராஜ்மா என்றும் அழைப்பார்கள்.இந்த ராஜ்மாவில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இவை ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு செல்களை பாதுகாத்திடும். செல்களில் இருக்கக்கூடிய மிட்டோச்சோன்றியாவை பாதுகாக்கும். அதோடு இதில் விட்டமின் கேவும் இருப்பதினால் புதுசெல்களில் உருவாவதில் இருக்கிற சிக்கல்களை தவிர்க்க உதவிடும்.
ராஜ்மாவில் கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. இவை உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.
இதில் அதிகப்படியான இரும்புச் சத்து இருக்கிறது. இது உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும். அதோடு இதில் மக்னீசியமும் இருப்பதால் மனதளவில் சோர்வாக உணர்வது தவிர்க்கப்படும். அதைத் தவிர இது உங்கள் உடலில் இருக்கிற கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்த உதவிடும். மேலும் இதிலிருக்கிற ஃபோலேட் உடலில் ஹோமோசிஸ்டின் உற்பத்தியை கட்டுப்படுத்தும். இதனால் பக்கவாதம் பாதிப்பிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
Reviews
There are no reviews yet.