Description
எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது. இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும். ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.
Reviews
There are no reviews yet.