Description
உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கப்படுகின்றன.
உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது. இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்து, எந்த வித நோயையும் அண்ட விடாமல் தடுக்கும் குணம் கத்தரியில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலத்திற்கு உள்ளது. இது தான் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
கத்தரிக்காயை தினமும் சாப்பிடுவது நமது தலை பகுதியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் முடியின் வேர் பகுதி ஊக்குவிக்கப்பட்டு முடி நன்கு வளருகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் மற்றும் முடியும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதை நம்புங்கள்.
Reviews
There are no reviews yet.