Badam 100g / பாதாம் பருப்பு

134.00

12 in stock

SKU: Nut1002 Category:

Description

பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.பாதாம்… பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.

எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.