Description
பல காலமாக பெண்கள் தலைக்குக் குளித்த பின்னர் தூபமிடுதல் என்ற பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதை அன்றைய `ஹேர் டிரையர்’ என்றும் குறிப்பிடலாம். நாளடைவில் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. உண்மையில், கூந்தலுக்குத் தூபமிடுவதால், ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியம் பெறும்.
அக்காலங்களில், குழந்தைகள் அனைவரும் வாரமொருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்ததும், தலைக்கு சாம்பிராணி புகை போடுவர், பெண்களும் குளித்து வந்ததும், சாம்பிராணி புகையை சுவாசித்து, தலையிலும் காட்டிக்கொள்வர். ஏன், என்ன காரணம்?
முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும்.
மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், அனைவரும் நலமுடன் வாழ்ந்தனர்.
Reviews
There are no reviews yet.