Description
உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள்:
உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள், நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் நோய்க் கிருமி அல்லாத நுண்ணுயிரிகள் போன்றவற்றை நவீன உயிரித் தொழில்நுட்ப முறையில் தகுந்த வளர்ச்சி ஊடகங்களைக் கொண்டு இனப் பெருக்கம் செய்த ஒரு கலவையாகும். இது மட்கும் செயலை ஊக்கப்படுத்துகிறது.
உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள்:
1. லேக்டிக் அமில பாக்டீரியா
2. போட்டோடிராபிக் பாக்டீரியா
3. ஈஸ்ட்
4. ஆக்டினோமைசிட்டிஸ் போன்ற நுண்ணுயிரிகளை முக்கியக் கூறுகளாகக் கொண்டுள்ளது.
பயன்கள்:
1. உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள் கம்போஸ்டிங் எனப்படும் மட்கும் செயலில் உபயோகப்படுத்தும் போது உரக் குவியலில் இருந்து வரும் அழுகல் வாடையை முற்றிலும் நீக்குகிறது. இந்த முறையில் விரும்பத் தகாத வாடை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் நச்சுப் பொருட்கள் உருவாவதை முழுமையாக அடக்குகிறது. மேலும் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்தை உண்டு செய்யும் பொருட்களையும் உருவாக்குகிறது.
2. உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகளை நாம் மட்க வைக்க உபயோகப்படுத்தும் போது உரக்குவியலை அடிக்கடி திருப்பிவிட வேண்டியது இல்லை என்பதால் உரத் தயாரிப்புச் செலவைக் குறைக்கிறது.
3. உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள், தழைச்சத்தான நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்களை பசுமைக்குடில் வாயுக்களாக வெளியேறாமல் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. தழைச்ச சத்தானது அங்ககப் பிணைப்புகளாக இணைக்கப் படுவதால் குறைந்த அளவே வெளியேற்றப்படுவதால் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மண்ணில் தக்க வைக்கப்படுகிறது.
4. உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள் ஈக்களை திறம்படக் கட்டுப்படுத்துகிறது. மற்றும் அழுகல் வாடையையும் கட்டுப்படுத்துகிறது.
5. உயிர் திறன் மிகு நுண்ணுயிரிகள் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.
உபயோகப்படுத்தும் அளவுகள்:
மண்ணில் விடுதல்: 1 லிட்டர்/ ஏக்கர்
மட்க வைக்க: 100-250 மில்லி – ஒரு டன் கழிவுகளுக்கு (அதிக C:N, கரிமம்:தழைச்சத்து விகிதத்திற்கு – அதிக அளவு உபயோகிக்கவும்)
கெட்ட வாடையைக் குறைக்க: 100-250 மில்லி – ஒரு லிட்டர் தண்ணீருக்கு (துர்நாற்றத்தைப் பொருத்து அதிக அளவு உபயோகிக்கவும்)
ஈ கட்டுப்பாடு: 10-100 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு.(தீவிரத்தைப் பொருத்து அதிக அளவு உபயோகிக்கவும்)
Main constituents of micro organisms in Uyir Effective Microbes are as follows.
- Lactic Acid Bacteria Yeast
- Phototrophic Bacteria Actinomycetes etc.,
Advantages of Using Uyir Effective Microbes :
Uyir Effective Microbes if used in the composting process eliminates rotting from the compost heap. The process not only completely represses unpleasant smells and toxic metabolic by-products, but in turn also produces vitamins and bioactive substances.
When we use Uyir Effective Microbes, it is no longer necessary to frequently turn over the heap during composting and hence saving in the cost of production.
Uyir Effective Microbes also helps to retain the nutrients, especially the nitrogen, and are not lost as greenhouse gases into the atmosphere. The nitrogen is mainly locked in with organic bonds, i.e. relatively little is mineralised and so more nutrients are retained in the soil.
Uyir Effective Microbes controls flies effectively.
Uyir Effective Microbes acts as a plant growth promoter also.
Crops: All Crops
SOIL APPLICATION:
- For 1 acre of land, approximately take 5lt EM(Effective Microbes) mixed with 200lt water and can spread it in the land once in 15 days.
- SPRAYING DENSITY: For 1lt water, mix EM(Effective Microbes) 25ml.
S B VIDHYA . –
very useful for my kitchen garden to produce fertilizers both liquid & solid.
kgkathirvel1981 –
Yes, Thank You
sbvidhya55 –
very useful for my garden to make fertilizers with the waste vegetables,fruits,dry leaves etc.Decomposes very quick.
kgkathirvel1981 –
Thank You for your Valuable Feedback