வரலாற்றில் ஒரு பார்வை
பலரால விரும்பி உண்ணப்படுகிற நிலக்கடலை தென் அமெரிக்காவ பூர்வீகம் கொண்டது. தற்காலத்துல சீனா, இந்தியா, நைஜீரியா மாதிரியான நாடுகள்ள தான் அதிகமா உற்பத்தி செய்றாங்க.
நிலக்கடலைக்கு பல பேர் இருக்கு. வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை அந்த மாதிரி பலவிதமா அத கூப்பிடலாம். இது மகாத்மா காந்திக்கு ரொம்ப பிடிச்ச உணவும் கூட.
சமையல் பயன்பாடுகள்
நிலக்கடலைய ஆவியில வேகவைத்தோ, இல்லனா வறுத்தோ நம்ம சாப்பிடலாம். வெல்லப்பாகோட கலந்து கடலை மிட்டாய்யாவும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. கடலைய பொடி செஞ்சு, இனிப்பு சேர்த்து உருண்டையா புடிச்சும் சாப்பிடலாம்.
வெளிநாடுகள்ல நிலக்கடலைய அரைச்சு கடலை வெண்ணை (பீனட் பட்டர் – Peanut Butter) செஞ்சு இதை ஜாம் போல பிரட்கள்ள தடவி சாப்பிடவும் பயன்படுத்தறாங்க. சமீப காலத்துல இந்தியாவுலயும் கடலை வெண்ணையோட பயன்பாடு அதிகரிச்சுட்டே வருது.
நிலக்கடலைல சட்னி செஞ்சும் சாப்பிடலாம். அத முக்கியமா இட்லி தோசைக்கு (Idly and Dosa) தொட்டுச் சாப்பிட்டா மிக மிக சுவையா இருக்கும்.
கடலைப் பொடிய வெள்ளை சாப்பாடோட நெய்யோ அல்லது எண்ணெயோ சேர்த்து சாப்பிடலாம். நல்ல இயற்கையான முறைல எந்த கலப்படமும் இல்லாத சுவையான நிலக்கடலை பொடி மற்றும் நிலக்கடலை சம்பந்தபட்ட எந்த பொருட்கள் வேணும்னாலும் Uyir Organic Farmers Market la நீங்க வாங்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்!
நிலக்கடலைல மாங்கனீசு சத்து அதிகமா இருக்கு. இது நம்ம சாப்பிடும் உணவில் இருக்கிற கால்ஷியத்த நம்ம உடல் உறிஞ்சரதுக்கு உதவி செய்து.
மேலும் ரெஸ்வரெட்ரால், பாலிபீனால்ஸ், ஆண்டி ஆக்சிடண்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் ஒமேகா – 3 போன்ற சத்துக்கள் எல்லாம் நிலக்கடலையில் நிரம்பி இருக்கு.
மருத்துவ குணங்கள்!
- இதய வால்வுகள பாதுகாக்க இது உதவி செய்து.
- பல வகையான நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதோட நம்ம இளமையையும் பாதுகாக்குது.
- கெட்ட கொழுப்ப உடம்புல குறைச்சு நல்ல கொழுப்ப அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு இருக்கு.
- நம் உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குது.
- அது மட்டும் இல்லாம குடல் புற்றுநோய் குணமாகவும் இது உதவி செய்து.
- தினமு நிலக்கடலை சாப்பிடறவங்களுக்கு மூளையோட செயல் திறன் அதிகரிக்கிறது மட்டும் இல்லாம ரொம்ப கூர்மையான ஞாபக சக்தியும் உண்டாகிறதா சில ஆய்வுகள் சொல்லுது.
- இதை சாப்பிடுவதால தீவிர ஞாபக மறதி நோயான அல்சைமர் கூட 70 சதவீதம் வரை சில நபர்களில் குறைகிறதா மருத்துவர்கள் சொல்றாங்க.
பிற பயன்பாடுகள்
வேர்க்கடலைய பல்வேறு வடிவங்களா நம்ம பயன்படுத்தலாம். கடலை எண்ணெய், வேர்க்கடலை, கேரமல் பார்கள், கடலை பால், கடலை மாவு, கடலை வெண்ணெய், வறுத்த வேர்க்கடலை, வேர்க்கடலை தின்பண்டங்கள் மாதிரி 300க்கும் மேற்பட்ட வகையான விதத்துல பயன்படுத்தலாம். நிலக்கடலைய ஆடு மாடுகளுக்கு உணவாவும் கொடுக்கலாம்.
முடிவுரை
ஊட்டச்சத்த அதிகரிக்க வேர்கடலை ஒரு சிறந்த வழி. நோய்கள கட்டுப்படுத்துவதற்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதற்கு அப்டீன்னு எல்லாருக்குமே இது பல பலன்கள தருது. இது அத்தியாவசிய உணவுப் பொருள்கள்ல ஒன்று.
கட்டாயமா எல்லாருமே சரியான அளவுல சாப்பிட்டு அதில் இருக்கிற ஊட்டச்சத்துக்கள பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும்.